முகப்புகோலிவுட்

ஆதித்யா வர்மாவை முடித்து வைத்த விக்ரம்! வைரலாகும் வீடியோ !

  | July 16, 2019 16:06 IST
Dhruv Vikram

துனுக்குகள்

 • அர்ஜுன் ரெட்டியின் ரீமேம் ஆதித்யா வர்மா
 • அர்ஜுன் ரெட்டி படத்தின் உதவி இயக்குநர் கிரிசய்யா இப்படத்தின் இயக்குநர்
 • நடிகர் விக்ரம் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவைத்துள்ளார்
கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமே செய்யப்பட்டு வருகிறது.
 
தமிழில் இப்படத்தை பாலா இயக்கினார். இப்படம் மூலம்  விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகினார். படம் வெளியாக தயார் நிலையில் இருந்த போது தயாரிப்பு நிறுவனத்துக்கும் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டது.
 

 
இந்நிலையில் தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசய்யா தமிழ் ரீமேக்கை இயக்குவார் என்று படக்குழு அறிவித்தது. பனித்தா சந்துவை இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விறுவிறுப்பாக தொடங்கிய ஷூட்டிங் நேற்று முடிவடைந்துள்ளது. இதை துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நடிகர் விக்ரம் படம் எடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com