ட்விட்டரில் துருவ நட்சத்திரம்' படத்தின் அப்டேட்டை வெளியிட்ட கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இயக்குநர் கார்த்திக் நரேன் அதிரடி பின்னூட்டம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படத்தின் பின்னணி பணிகள் துவங்கி விட்டதாகவும், 60 நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விரைவில் இந்தப் படம் திரைக்கு வரும் என்றும் இயக்குனர் கவுதம் மேனன் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விக்ரம் உடன் பணியற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இந்த படம் தன்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.இதனையடுத்து பலரும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதில் கௌதம் வாசுதேவ் மேனனின் ட்விட்டர் பக்கத்தில் பின்னூட்டம் அளித்துள்ள இயக்குநர் கார்த்திக் நரேன் நீங்கள் இயக்கி இருக்கும் துருவ நட்சத்திரம் படம் எப்படி உங்களுடைய மனதிற்கு நெருக்கமாக இருக்கிறதோ அதே போல் நான் இயக்கிய நரகாசூரன் படம் என்னுடைய மனதுக்கு மிகமிக நெருக்கமான படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தைப்பற்றி நீங்கள் எனக்கு ஒரு கிளாரிட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு காரணம் ‘நரகாசூரன்' படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார், படப்பிடிப்பு பணிகள் முடிந்து இப்படம் இன்னும் திரைக்கு வராமல் இருப்பதே. இந்த டிவீட் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.