முகப்புகோலிவுட்

ரிதிக் ரோஷன் பாடலுக்கு ட்ரெட்மில் டான்ஸ் ஆடிய நடிகர் அஸ்வின்.!

  | June 30, 2020 14:57 IST
Hrithik  Roshan

அஸ்விந் முன்நதாக விஜயின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஆடிய ட்ரெட்மில் டான்ஸ் வைரலானது.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஸ்வின் குமார், கடந்த வாரம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம் பெற்றுள்ள ‘அண்ணாத்த ஆடுறார்' என்ற பாடலுக்கு ‘உலக நாயகன்' கமல் ஹாசனைப் போலவே ஒரு டிரெட்மில்லில் நடனமாடி, கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களிடமிருந்து அற்புதமான கமண்டுகளையும், பாராட்டுக்களையும் பெற்றார்.

அதையடுத்து, தனது பிறந்தநாளை (ஜூன்21) முன்னிட்டு, விஜயின் வரவுள்ள ‘மாஸ்டர்' படத்தில் இடம்பெறும் ‘வாத்தி கம்மிங்' பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அடுத்த நாள், (ஜூன் 22) தளபதி விஜய் பிறந்த நாள் என்பதால், அந்த வீடியோ விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது, அவர் பாலிவுட் நடிகர் ரிதிக் ரோஷனுக்காக ஆடிய ட்ரெட்மில் ஆட்டம் தற்போது செம வைரலாகிவருகிறது. ரிதிக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியான ‘வார்' திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் ஜெய் சிவசங்கர்'  பாடலுக்கு, ரிதிக் ரோஷன் போலவே ஆடியுள்ளார் அஸ்வின்.

‘ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜியம்' என்ற படத்தின் மூலம் மலையாள ரசிகர்களைடையே பிரபலமாக உள்ள அஸ்வின், நடிகர் இந்திரஜித்தின் வரவிருக்கும் ‘அஹா' படத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார். இவர் தமிழில் ‘ரணம்' மற்றும் தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com