முகப்புகோலிவுட்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்! அஜித்தை பின்னுக்கு தள்ளிய ஜெயம் ரவி!

  | August 20, 2019 16:31 IST
Box Office

துனுக்குகள்

 • கடந்த வார பாக்ஸ் ஆபிஸிஸ் நிலவரத்தில் முதல் இடம் பிடிக்கிறது கோமாளி
 • மிஷின் மங்கள் திரைப்படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளத
 • விஸ்வாசம் படத்தை அடுத்து நேர்கொண்ட பார்வை 100 கோடி வசூல் பெற்றுள்ளது
Chennai Box Office Report: கடந்த இரண்டு வாரங்களில் வெளியான திரைப்படங்களில் கடந்த வார இறுதியில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் மூன்று படங்களின் நிலவரங்கள் பற்றிய செய்தி இவை.
 
பாலிவுட் இயக்குநர் ஜெகன் சக்தி இயக்கத்தில், அக்ஷய் குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன்,இன்னும் பலர் நடிப்பில் பாலியுட்டில் உருவாகி இருக்கும் படம் ‘மிஷின் மங்கள்'. இப்படம் இந்திய வின்வெளி ஆராய்ச்சி மைய்யம் சார்பில் நடத்தப்பட்ட மார்ஸ் ஆர்பிட் மிஷினின் வெற்றயை மைப்படுத்தி உருவாகி இருக்கும் படம். செய்வாய் கிரகத்தின் நீள்வட்ட பாதையில் செயற்கைகோளை செலுத்தியது எப்படி என்பதைப்பற்றிய படம் இது. இப்படம் வியாபார ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளிலேயே 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. வெளியான 4 நாட்களில் உலகம் முழுவது 97 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது அக்‌ஷய் குமார்  திரைப்படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங் வசூலாக பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வார இறுதியில் மிஷன் மங்கள் திரைப்படம் 3-வது இடத்தை பிடித்துள்ளது
 
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களை கடந்து இப்படம் திரையரங்குகளை அலங்கரித்து வருகிறது. பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றி பேசியுள்ள இப்படம் பலதரபட்ட மக்களின் பேராதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை திரைப்படமும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வார இறுதியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
 
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கோமாளி.
இப்படம் 16 வருடங்கள் கோமாவில் இருந்து எழுந்த இளைஞன் என்னென்ன மாற்றங்களை சந்திக்கிறார் அதை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. வெளியான முதல் வார இறுதியில் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்த வாரா பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது கோமாளி'.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com