முகப்புகோலிவுட்

கடைசி நேரத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்புக்கு நயன்தாரா வராதது ஏன்?

  | October 10, 2019 12:55 IST
Darbar

துனுக்குகள்

 • நயன்தாரா மூன்றாவது முறையாக ரஜியுடன் இப்படத்தில் நடிக்கிறார்
 • அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது
 • சம்பளம் தொடர்பாக கடைசி படப்பிடிப்புக்கு இவர் வரமறுத்ததாக செய்தி
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.முரகதாஸ் இயக்கி வரும் படம் ‘தர்பார்'. பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து ரஜினி(Rajini) இந்த படத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார்.
 
சந்திரமுகி, குசேலன், படங்களைத் தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா இந்த படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து டப்பிங் உள்ளிட்ட வேலைகளை தொடங்க இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாரா,தனக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக தரப்படாததால் கடைசி நாள் படப்பிடிப்பை புறக்கணித்ததாக கூறப்பட்டது. பொதுவாக படத்தில் நடிப்பவர்களுக்கு ஒப்பந்தமாகும் போது குறிப்பிட்ட தொகையையும், மீத தொகையை டப்பிங் சமயத்திலும் வழங்குவார்கள். ஆனால், நயன்தாராவிற்கு வேறு ஒருவர் டப்பிங் செய்வதால் கடைசி நாள் படப்பிடிப்பின் போது முழு சம்பளத்தையும் நயன்தாரா பெறுவது வழக்கம் என்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் முருகதாஸ் மீதி சம்பளத்துக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறிய பின்னரே, இறுதி நாள் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் வதந்தி எனவும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நயன்தாராவால் கடைசி நாள் படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com