முகப்புகோலிவுட்

அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பில் மாற்றம்..! கொரோனாவின் சதி..!

  | April 04, 2020 17:01 IST
Directer Plans Huge

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு ‘தல' அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ‘வலிமை' திரைப்படத்தில் நடித்துவருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் அஜித் ஒரு மாஸ் போலீஸாக நடிக்கிறார். சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு முடித்துவிட்டு,  ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, படப்படிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இயக்குநர் எச். வினோத் ஜார்டனில் ஒரு முக்கிய அட்டவணையை இப்படத்துக்காக திட்டமிட்டிருந்தார். அங்கு முக்கியமான பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவிருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையில், அந்நாட்டில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் தனது ‘ஆடுஜீவிதம்' நடிகர்கள் மற்றும் குழுவினருடன் அதே ஜார்டனில் சிக்கித் தவித்துவருகிறார். அந்நாடு அனைத்து படப்பிடிப்பு அனுமதிகளையும் காலவரையின்றி ரத்து செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வலிமை' படப்பிடிப்பில் மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படாத மற்றொரு நாட்டை ‘வலிமை' குழு தேடிவருவதாக கூறப்படுகிறது.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவருகிறார். மேலும், முன்னணி பெண் கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி, நகைச்சுவைக்கு யோகி பாபு மற்றும் வில்லனாக தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா ஆகியோர் நடிக்கின்றனர்.    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com