முகப்புகோலிவுட்

தர்பார் நஷ்டம்: உயர் நீதிமன்றத்தை நாடிய ஏ.ஆர்.முருகதாஸ்!!

  | February 06, 2020 14:31 IST
Darbar

‘தர்பார்' திரைப்படஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், விநியோகஸ்தர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

‘தர்பார்' திரைப்படஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், விநியோகஸ்தர்களிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

சமீப நாட்களாக தர்பார் திரைப்படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அப்படத்தின் தமிழ்நாட்டு விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, அது குறித்து பேச அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் என மூவரையும் சந்திக்க முற்பட்டு, ஏமாற்றமடைந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கூடிய வட மற்றும் தென் ஆற்காடு, சேலம், திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட விநியோகஸ்தர்கள், தர்பார் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை நம்பி, ஏ. ஆர் முருகதாஸ் இயக்கம் என்ற காம்பிநேஷனுக்காகவும் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்டதாகவும், அதில் 25 கோடி நஷ்டட் ஏற்பட்டதையடுத்து, சூப்பர் ஸ்டாரையும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸையும் பார்க்க முயற்சித்த போது, போலீஸை அழைத்து தங்களை வெளியேற்றியதாகவும் தெரிவித்திருந்தனர். என்று குற்றம் சட்டியிருந்தனர். இச்செய்தி தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து விநியோகஸ்தர்கள் இயக்குனரை பார்க்க  முயற்சித்துள்ள நிலையில், தற்போது, இத்திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், போலீஸ் பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்