முகப்புகோலிவுட்

‘அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்: எஸ்.ஐ ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்.!!

  | May 25, 2020 23:52 IST
Sasikumar

இப்படத்தில் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகின்றன.

பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த மலையாள ஹிட் திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்' தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ‘ஆடுகளம்', ‘ஜிகர்தண்டா' படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் பெற்றுள்ளார்.

ஒரு செல்வாக்குமிக்க முன்னாள் ஹவில்தார் மற்றும் துணை ஆய்வாளருக்கு இடையிலான மோதலைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சச்சி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். மலையாளத்தில் இப்படம் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியானது.

தமிழில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனனுக்கு இணையாகத் திறமை வாய்ந்த நடிகர்களைத் தேடுவதாகத் தயாரிப்பாளர் கூறியிருந்தார். அதையடுத்து இப்படத்தில் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகின்றன.

7gfqcn38

இந்நிலையில், பிஜு மேனனின் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிப்பார் என்று கூறப்படுகிறது. கடைசியாக நாடோடிகள்-2வில் நடித்த சசிகுமார், பாக்கியராஜின் ‘முந்தானை முடிச்சு' படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிப்பார் என்று வதந்தி பரவியது. இருப்பினும், ஆர்யா இப்போது இப்படத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com