முகப்புகோலிவுட்

பெற்றோர்களின் ஆசியுடன் ஐஸ்வர்யாவை கரம் பிடித்த ஏ.எல்.விஜய்!

  | July 12, 2019 15:08 IST
Al Vijay

துனுக்குகள்

 • 2014ம் ஆண்டு அமலாபாலை திருமணம் செய்துகொண்டார் ஏ.எல்.விஜய்
 • 2017ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்
 • ஜெயலலிதாவின் பயோ பிக்கை எடுத்து வருகிறார் ஏ.எல்.விஜய்
இயக்குநர் ஏ.எல். விஜய் மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக கடந்த மாதம் 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். ஜூலை மாதம் சென்னையில் திருமணம் நடைபெறும் என்றார். இந்நிலையில் விஜய், ஐஸ்வர்யா திருமணம் இன்று  நடந்து முடிந்துள்ளது.
 
இயக்குநர் விஜய் தமிழில் ‘கிரீடம்','பொய் சொல்லப் போறோம்', ‘மதராச பட்டினம்', ‘தெய்வ திருமகள்', ‘தலைவா', ‘சைவம்', ‘தேவி' உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு தமிழில் முன்னணி நடிகையான அமலாபாலை திருமணம் செய்துக்கொண்டார்.
 
மூன்று வருடங்களுக்குள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017-ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
 
தற்போது பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2-வது திருமணத்துக்கு அவர் சம்மதித்து, ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இன்று அவருடைய திருமணம் பெற்றோர்களின் ஆசியுடன் நண்பர்கள் புடைசூழ நடைப்பெற்றது. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com