தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த சங்கத்தின் நித்வாகிகளின் பதிவிக்காலம் முடிந்தததை அடுத்து இயக்குநர் பாரதி ராஜா ஒரு மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்பு பாரதிராஜா பதவி விலகியதை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 21ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஒரு அணியாகவும், இயக்குநர் அமீர் தலைமையில் ஓர் அணியாகவும் போட்டியிட தயார் ஆனார்கள். இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அமீரின் மனுவும், அமீர் தலைமையிலான அணியில் இருந்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனநாதன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜனநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து அமீர் தலைமையிலான அணியின் சார்பாக போட்டி அனைவரும் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இதனால் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஆர்.வி. உதயகுமார் பொதுச்செயலாளராகவும், பொருளாளராக பேரரசு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து கூறி இருக்கும் அமீர், “இது தொடர்பாக நீதிமன்றம் செல்லப்போவதில்லை. நீதிமன்றம் சென்றால் மற்ற திரைப்பட சங்கங்கள் முடங்கியது போல் இயக்குநர்கள் சங்கம் முடங்கும்” அவர் தெரிவித்திருக்கிறார்.