முகப்புகோலிவுட்

எஸ்.பி.பி குணமடைய மாஸ் பிரார்த்தனைக்கு அழைக்கும் ‘தளபதி 65’ இயக்குநர்.!

  | August 19, 2020 19:54 IST
Spb

எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தர்பார்’ படத்தில் ‘சும்மா கிழி’ பாடலை ரஜினிக்காக பாடியிருந்தார்.

இயக்குநர் முருகதாஸ் கோலிவுட்டின் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த ஆக்‌ஷன் என்டர்டெய்னரான ‘தர்பார்'  இயக்கியுள்ளார். இதில் பல தசாப்தங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், ‘தளபதி' விஜயின் 65 வது படத்தை இயக்க உள்ளார். இது துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரின் நான்காவது கூட்டணியாகும். துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியாக இப்படம் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய் காரனமாக சிகிச்சைப் பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பிக்காக மாஸ் பிரார்த்தனைகளில் சேருமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் கோவிட் 19-க்கு நேர்மறையான பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் பாடகர் எஸ்.பி.பியை குழந்தை பருவத்திலிருந்தே தனது பாடல்களால் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததற்காக பாராட்டியுள்ளார். ஆகஸ்ட் 20 அன்று மாலை 6 மணிக்கு ஒரு பிரார்த்தனைக்கு மக்களுக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தர்பார்' படத்தில் ‘சும்மா கிழி' பாடலை ரஜினிக்காக பாடியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com