முகப்புகோலிவுட்

#HappyBirthday அட்லி! அடுத்து அட்லியுடன் இணையும் ஹீரோ யார்?

  | September 21, 2019 16:56 IST
Atlee

துனுக்குகள்

 • பிகில் படம் தீபாவளி அன்று வெளியாகிறது
 • இன்று அட்லி தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்
 • இவர் அடுத்து ஜுனியர் என்,டி,ஆர்வுடன் இணைவதாக பேசப்படுகிறது
பெரும் போட்டிகள் நிறைந்த களம் சினிமா தளம். இதில் நீண்ட ஆண்டுகளாக ஒரு வெற்றிக்காகப் போராடிவரும் படைப்பாளிகள் ஏராளம். ஒரு நல்ல படைப்பு என்பது பார்வையாளர்களின் உணர்வுகளோடு ஊடுருவி அது ஏற்படுத்தும் தாக்கமே அந்த படைப்பாளிக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி. உலவியலாக ஒரு படைப்பின் வெற்றித் தோல்வியை ஒரு புறம் இப்படி நிறுவிக்கொண்டாலும் வணிக ரீதியா வெற்றியே சினிமா துறையில் வெற்றி பெற்ற படைப்பாள அறியப்படுகிறது. இந்த களத்தில் தன்னுடைய முதல் படத்திலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற்றவர் இயக்குநர் அட்லி. இளம் படைப்பாளிகள் பலர் இந்த தளத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் தான் இது வரை இயக்கிய  மூன்று படங்களுமே விமர்சன ரீதியான வணிக ரீதியான வெற்றியை பெற்று தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார் அட்லி.
 
விஜய்யுடன் தெறி, மெர்சல் உள்ளிட்ட வெற்றி படங்களைத் தொடர்ந்து தற்போது இவர் மூன்றாவது முறை கூட்டணி அமைத்திருக்கும் படம் பிகில். கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியிருக்கிறது. வெற்றிகரமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடத்தி முடித்தார் அட்லி. அந்த ஆனந்த களிப்பிலே தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 
இவர் அடுத்து ஷாருக்கான் உடன் இணைகிறார் என சில மாதங்களுக்கு முன்பு செய்தி வந்தது. ஆனால் அது பற்றி தற்போது வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதும் வரவில்லை. இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஒரு செய்தி பரவிவருகிறது. டாப் ஹீரோவான ஜூனியர் என்டிஆர் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். தற்போது அவர் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் முடிந்தபிறகு அட்லீயுடன் படம் துவங்கும் என கூறப்படுகிறது.  எதுவாயினும் இந்த களத்தை தனக்கான ஒரு தளமாக மாற்றி அட்லி விளையாடும் விளையாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  முதல் வெற்றியைப் போலவே தொடர்ந்து அவர் பல வெற்றிப்படங்களை கொடுக்க வாழ்த்துகள்!
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com