முகப்புகோலிவுட்

"திரைப்பட படப்பிடிப்பு" - முதல்வரை சந்தித்து மனு கொடுத்த இயக்குநர் இமயம் மற்றும் SAC..!

  | July 31, 2020 08:01 IST
Edappadi Palanisamy

துனுக்குகள்

 • 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள
 • இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் தொடங்காத நிலையில் திரைத்துறையினர்
 • திரைப்பட படப்பிடிப்பு நடத்திட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து மனு
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது என்றும், தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறைப்படி  இ-பாஸ் பெற வேண்டும். பொதுப்போக்குவரது இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்புகளும் தொடங்காத நிலையில் திரைத்துறையினர் அதுகுறித்து முதல்வரை சந்தித்துள்ளனர். இந்நிலையில் மாண்புமிகு முதல் வெளியிட்ட ட்விட்டர் அறிக்கையில் "சென்னை, முகாம் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் திரு.பாரதிராஜா அவர்கள் மற்றும் திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து, திரைப்பட படப்பிடிப்பு நடத்திட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கை  குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com