முகப்புகோலிவுட்

இயக்குநர் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மூத்த இயக்குநர்..!

  | June 10, 2019 15:19 IST
Bharathiraja

துனுக்குகள்

  • தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா
  • போட்டியின்றி இயக்குநர் சங்கத் தலைவாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • நடிகர் சங்கத் தேர்தல் ஜுன் 23 ல் நடைபெறுகிறது
தமிழ்நாடு தென் இந்திய திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு மூத்த இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
தென் இந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதிவிக்காலம் முடிந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லுரியில்  நடக்கிறது. இந்த தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.
 
இதில் நாசர், விஷால்,கார்த்தி, இன்னும் பலர் அடங்கிய பாண்டவர் அணியும். பாக்கியராஜ் தலைமையிலான அணியும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு மூத்த இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்