முகப்புகோலிவுட்

FEFSI உறுப்பினர்களுக்கு அரிசி வழங்கிய ‘இயக்குநர் இமயம்’

  | April 10, 2020 14:45 IST
Director Bharathiraja

முன்னதாக அவர், காவல்துறையினர், துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்த 21 நாட்கள் பூட்டுதல் காலத்தில் சமூக துரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், சுத்தத்தையும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பற்றியும் கோலிவுட் பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் உபகரணங்களை வழங்குவதில் முன்னணி நட்சத்திரங்களின் பல ரசிகர் மன்றங்கள் ஈடுபட்டுள்ளன. திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கும், தென்னிந்திய சினிமா ஊழியர்களின் நலனுக்காக FEFSI-க்கும் பணமாகவும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்தும் உதவ வருகின்றார்.

dtsds0go


இந்நிலையில், தற்போது மூத்த இயக்குநர்-நடிகர் பாரதிராஜா, வேலையின்றி அன்றாட தேவைகளுக்கு சிரமப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகளைக் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “வணக்கம், கொரோனா வைரஸின் அசாதாரண தாக்குதல் உலகையே முடக்கி, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு வேலைகள் இன்றி தவித்து வரும் பெப்சி உறுப்பினர்களுக்கு ஒரு சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25kg) வழங்குகிறேன். மேலும், நோயின் தீவிரம் கருதி அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் அன்போடு வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.

முன்னதாக அவர், நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக, காவல்துறையினர், நிறுவன ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கி உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com