முகப்புகோலிவுட்

புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு இயக்குநர் கௌதமன் எச்சரிக்கை!

  | August 14, 2019 20:41 IST
Gowthaman

துனுக்குகள்

 • இன்று கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் இவர்
 • நீட் தேர்வினால் 9 மாணவர்கள் உயிர் இழந்துள்ளதாக தெரிவித்தார்
 • கௌதமன் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார்
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்த பின் அவசர அவசரமாக பல சட்ட மசோதாக்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீர் விவகாரம் முதல் புதிய கல்விக்கொள்கை வரை அதன் பட்டியல் நீள்கிறது. குறிப்பாக புதிய கல்விக்கொள்கை அறிக்கை வெளியான பிறகு தமிழகத்தில் இருந்து பெரும் எதிர்ப்பு குரல் வெடித்து வருகிறது.    புதிய கல்வி கொள்கை குறித்து கல்வியாளர்கள் உட்பட திரைத்துறையை சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்திருந்தார், அதற்கு பா.ஜ.க தரப்பினர் பலர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
 
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக ரத்து செய்யவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
புதிய கல்வி கொள்கையை ரத்துசெய்ய வலியுறுத்தி உயர் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை இன்று நேரில் சந்தித்த இயக்குநர் கௌதமன் கோரிக்கை மனுவை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நீட் தேர்வினால் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர் என்று தெரிவித்தார். எனவே நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால், இந்தி திணிப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் ஆகியவற்றை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் இதனை கொண்டுவர மாட்டோம் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com