முகப்புகோலிவுட்

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டார். பதறாம படிங்க!

  | January 06, 2019 21:12 IST
Mani Ratnam

துனுக்குகள்

 • தமிழ்த்திரையுலக ஜாம்பவான் மணிரத்னம்
 • இவரது செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது
 • தற்போது பொன்னியின் செல்வன் நாவல் படமாகிறது
தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்னம். எந்த நடிகர் நடிக்கிறார் என்பதை விட இது மணிரத்னம் படம் என்பதற்காகவே இவருடைய படத்திற்கு செல்லும் ரசிகர் பட்டாளம் இன்றளவும் இருக்கிறது என்பது மிகையல்ல.
 
சமீபத்தில் இவர் இயக்கி இருந்த செக்க சிவந்த வானம் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான பொன்னியின் செல்வன்  நாவலை தழுவி படத்தை இயக்க உள்ளார்.
 
ஏற்கனவே இந்தப் படத்தில் விக்ரம், சிம்பு நடிக்க ஒப்பு கொண்டுள்ளதை அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரின் மருமகளான ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
 
மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் பொங்கலுக்குள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த படத்தில் சிம்பு, விக்ரம், அமிதாப் பச்சன் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடிக்க இருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com