முகப்புகோலிவுட்

“மாசான் பொண்ணு மீது பயித்தியமாய் இருந்தேன்”- ஜோ பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ்

  | January 26, 2019 11:15 IST
Mehandi Circus

துனுக்குகள்

  • இந்த படத்தை இயக்குநர் சரவணன் இயக்குகிறார்
  • இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் ராஜுமுருகன்
  • இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்
இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் இயக்கத்தில், இயக்குநர் ராஜுமுருகன் கதை-வசனம் எழுதி வெளியாக இருக்கும் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இந்த படத்தில் மதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடிக்க இவருடன் இணைந்து நடிக்கிறார் பாலிவுட்டில் வெளியாகி பல விருதுகளை பெற்ற “மாசான்” திரைப்படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்ட ஸ்வேதா திருப்பாதி.
 
இந்த படம் 90 களில் கதை நடப்பதாக காட்டப்படுவதாகவும், வட இந்தியாவிலிருந்து ஊர் ஊருக்கு சர்க்கஸ் காட்டி பிழைக்கும் ஒரு கம்பெனி தமிழ்நாட்டுக்கும் வருகிறது. இந்த சர்க்கஸ் கம்பெனியில் முக்கிய நபராக இருக்கும் சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த நாயகன் காதலிக்கிறார். ஆனால் நாயகன் விட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் சர்க்கஸ் கம்பெனியை ஊரை விட்டு காலி செய்து விட்டுப் போகும்படி வற்புறுத்துகிறார்கள். காதலியை தேடி காதலன் வட இந்தியா பகுதிக்கு பயணிக்கிறான்.  இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் மீதி கதை என்கிற தகவல் வெளியானது.
 
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பரியேறும் பொருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் “மெஹந்தி சர்க்கஸ்  படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க என்னை அழைத்ததற்கு இயக்குநர் சரவணனுக்கு நன்றி.  நான் இன்னொரு விஷயத்திற்கு சரவணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது இந்த படத்திற்காக கதாநாயகி ஸ்வேதா திருப்பாதியை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்ததற்கு.  மாசான் திரைப்படத்தில் அவர் நடிப்பை பார்த்து வியந்து போனேன். அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தின் மீது நான் பயித்தியமாக இருந்தேன். அந்த படத்தைப் பார்த்துதான், அந்த கதாபாத்திரத்தை பார்த்துதான் பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ கதாபாத்திரத்தை உருவாக்கினேன்” என்றார்.  இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்