முகப்புகோலிவுட்

மீண்டும் கதாநாயகனாக யோகி பாபு.!! தர்மபிரபு-2க்கு இயக்குநர் திட்டம்..!

  | September 22, 2020 01:41 IST
Yogi Babu Dharmaprabhu

இயக்குநர் யோகி பாபுவிடம் படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘தர்மபிரபு'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் எமனாக ராதா ரவி, சாம் ஜோன்ஸ், ரமேஷ் திலக், ரேகா மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வணிக ரீதியான வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.

இப்போது, சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், இயக்குநர் முத்துக்குமரன் மீண்டும் யோகி பாபுவுடன் இணையவுள்ளார். அதாவது அவர் யோகி பாபு நடிப்பில் ‘தர்மபிரபு' படத்தின் தொடர்ச்சியாக ‘தர்மபிரபு-2'வை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இப்படத்திற்காக முத்துகுமரன் கதை எழுதிவருவதாகவும், மேலும் அவர் யோகி பாபுவிடம் படத்தின் கதைக்களம் குறித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்துகுமார் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டு படத்திற்கான ஒரு தயாரிப்பாளரைக் கண்டுபிடித்தவுடன் ‘தர்மபிரபு 2' அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com