முகப்புகோலிவுட்

நச்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்ட பிரபல இயக்குநர்..?

  | May 06, 2019 16:06 IST
Sathish Chandrasekaran

துனுக்குகள்

  • டார்லிங் 2 படத்தை இயக்கியவர் சதீஷ் சந்திரசேகர்
  • ரதன் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்
  • கலையரசன், காளி வெங்கட் இப்படத்தில் முக்கி வேடத்தில் நடித்திருந்தனர்
சென்னை அண்ணா சாலையில் பார் வசதியுடன்  கூடிய பிரபல நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் வார இறுதியானால் கூட்டம் வருவது இயல்பு. அதே போல் சினிமா பிரபலங்களும் இந்த ஓட்டலுக்கு வந்து செல்வது வழக்கம்.
 
இந்நிலையில்  ஓட்டலுக்கு ‘டார்லிங் 2' படத்தை இயக்கிய இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் தனது நண்பர்களுடன் மது அருந்த வந்துள்ளார்.
 
அப்போது அவர், மதுபோதையில் அந்த ஓட்டலில் நடனமாடும் பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் மீது அந்த பெண் தேனாம்பேட்டை  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
அதன் அடிப்படையில்  காவல் துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் நல்லிரவு நேரங்களில் பார் இயக்குவதால் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. காவல் துறையினர் கட்டுபாடுகள் விதித்தும் பல ஓட்டல்கள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த ஓட்டலுக்கும் காவல் துறையினர் 2 மணிக்கு மேல் இயங்கக்கூடாது என கட்டுபாடுகள் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்