முகப்புகோலிவுட்

“ஜோதிகா சூர்யாவுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்” நெகிழ்ச்சியில் ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர்!

  | June 03, 2020 14:31 IST
Suriya

"எனது முதல் படத்தை மிகவும் மறக்கமுடியாததாக மாற்றியமைத்த உங்களுக்கும் சூர்யா சாருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்”

அறிமுக இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் ‘பொன்மகள் வந்தாள்' படத்துக்காக எப்போதும் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றியுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜோதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்'. இப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்பட தயாராக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப்பட்டதால் அனைத்து திரைப்படங்களைப் போலவே இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது.

அதனால், இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா இப்படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைமுக்கு ஒரு நல்ல விலைக்கு விற்றார். ஆனால், திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படங்களை எப்படி நேரடியாக OTT தளத்தில் விற்கலாம் என தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதையடுத்து பல சர்ச்சைகளைக் கடந்து, ‘பொன்மகள் வந்தாள்' நேரடியாக OTT தளத்தில் கடந்த மே 29-ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இப்படம் தற்போது ரசிகர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையுலக பிரபலங்க்லிடமிருந்தும் நேர்மறையான கருத்துக்களுடன், இப்படத்துக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “எனது 'பொன்மகள்' ஆனதற்கும், இந்த படத்துடன் என்னை நம்பியதற்கும் நான் உங்களுக்கு சொல்ல நன்றி பத்தாது. ஸ்கிரிப்டுடன் நிற்பது முதல் சூர்யா சார் வரை எடுத்துச் சென்றது வரை, நீங்கள் இல்லாமல் ஒரு நாளும் இல்லை, என்னை ஊக்குவிப்பதற்கு. இந்த படம் மீதான உங்கள் நிபந்தனையற்ற அன்பும் நம்பிக்கையும் தான் இன்று அப்படம் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி மா'ம். எனது முதல் படத்தை மிகவும் மறக்கமுடியாததாக மாற்றியமைத்த உங்களுக்கும் சூர்யா சாருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com