முகப்புகோலிவுட்

தமிழக அரசை கண்டித்து இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட்..!

  | July 10, 2020 22:46 IST
Pa Ranjith

"கொரோனா பணியில் இருக்கும் தூய்மைபணியாளர்களில் இதுவரை 9பேர் மரணமடைந்து விட்டார்கள், 1000க்கும் மேற்பட்டோர் நோய்யுற்று இருக்கிறார்கள்"

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை பெரிதும் பாதித்து வருகிறது. கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இப்போது, இயக்குனர் பா.ரஞ்சித் ட்விட்டரில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கடுமையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். கொரோனா நெருக்கடியின் போது 9 துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகவும், ஆயிரக்கணக்கானோர் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர்களைப் பாதுகாக்கப்படவோ அல்லது அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவோ தவறியதற்காக தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், தனது பதிவில் “ பெருத்துயரம்! கொரோனா பணியில் இருக்கும் தூய்மைபணியாளர்களில் இதுவரை 9பேர் மரணமடைந்து விட்டார்கள்.மேலும் 1000க்கும் மேற்பட்டோர் நோய்யுற்று இருக்கிறார்கள்.ஊழியர்களை பாதுகாக்க தவறிய, பாதிக்கபட்டோர்க்கு நிவாரணம் தராத தமிழக முதலமைச்சரை வன்மையாக கண்டிப்போம்!” என்றும் மற்றொரு ட்வீட்டில், “தோழர்களே! மருத்துவர்களை போல இந்த கொரோனா பேரழிவு காலத்தில் தங்களது உயிரை துச்சமென நினைத்து அயராது உழைத்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதிக்கபட்டோருக்கான உரிய இழப்பீடு  கிடைக்க தமிழக முதல்வருக்கு குரல் எழுப்புவோம்!” என்று கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com