முகப்புகோலிவுட்

“பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை” – திருமாவுக்கு ஆதரவாக இயக்குநர் பா.இரஞ்சித்!

  | November 20, 2019 12:50 IST
Thirumavalavan

துனுக்குகள்

 • நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு சவால்
 • பி.ஜே.பி கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார் காயத்ரி
 • இயக்குநர் இரஞ்சித் திருமாவிற்கு ஆதரவாக ட்வீட்
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இந்து கோயில்களில் பொறிக்கப்பட்டிருக்கிறம் தாம்பத்ய உறவுகளை சித்தரிக்கும் சிலைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு சில இந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
 
தமிழ் சினிமாவில் நடன கலைஞராகவும், நடிகையாகவும் இருக்கும் காயத்ரி ரகுராம் சமீபத்தில் பா.ஜ.க-ல் இணைந்தார். இவர் திருமாவளவனின் கருத்து எதிர்ப்பு தெரிவித்து தனிமனித விமர்சனத்திற்குள் சென்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசி வரும் காயத்ரியை கைது செய்யக்கோரி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையில் இயக்குநர் பா. இரஞ்சித் இந்த பிரச்னை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.  அதில்,
 
“ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள்,தனிமனித தாக்குதல்கள்&அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது.அண்ணன் #திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறபோவதில்லை!” என்று பதிவிட்டிருக்கிறார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com