முகப்புகோலிவுட்

“ராஜராஜன் சோழன் காலம் இருண்ட காலம்” இயக்குநர் பா.இரஞ்சித்

  | June 11, 2019 21:01 IST
Pa Ranjith

துனுக்குகள்

  • கபாலி படத்தை இயக்கியவர் இவர்
  • நீலம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்
  • அட்ட கத்தி இவரின் முதல் படம்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த 5ஆம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜராஜ சோழன் பற்றி இயக்குநர் பா. ரஞ்சித் பேசிய கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இதையடுத்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவர் மீது சாதி மத இன மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டுதல் மற்றும் கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்ததை அடுத்து இயக்குநர் பா. இரஞ்சிதிற்கு ஆதரவு குரல் அதிகரித்துள்ளது.
 
அனைவரும் விமர்சனத்திற்குட்டபட்டவர்கள்தான் என்கிற ஜனநாயக அடிப்படையில் முன்வைக்கப்படும் இது போன்ற கருத்துகளுக்கு வழக்கு பதிவு செய்வதா என இணையதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 
பன்நெடுங்காலமாக இந்த மண்ணில் வேறூன்றி இருக்கின்ற சாதிய பிரச்னைகளை பட்டியலிட்டு பேசிய பா.இரஞ்சித். “டெல்ட்டா மாவட்டங்களில் அதிக அலவில் சாதி கொடுமைகள் நடந்திருக்கிறது என வரலாறு கூறுகிறது. விவசாய நிலங்கள் எங்கெல்லாம் அதிக அளவில் இருக்கிறதோ அங்கெல்லாம் சாதி இறுக்கமாக இருந்து வருகிறது என வரலாறு கூறுகிறது. நிலம், சாதி, கோயில் இவைதான் பின்னி பினைந்த அமைப்பாக இருக்கிறது. நீர் பாசனத்தை ஒட்டிய நிலங்கள் எப்படி சாதியாக இருக்கிறது என நிறைய ஆராய்ச்சிகள் சொல்கிறது.
 
நிலங்கள் அதிகம் இருக்கக்கூடிய அந்த இடங்களில் தலித்துகளுக்கும், உழைக்கும் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஏன் நிலம் இல்லை என கேள்வி எழுகிறது. நில உச்ச வரம்பு சட்டம் வந்த பிறகு நில உச்ச வரம்பு சட்டத்திற்கு அடங்காத மடங்கள், குறிப்பாக இந்த மடங்களில் 40ஆயிரம் நிலங்களை யார் பயன்படுத்துகிறார்கள்” என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தொடர்ந்து  பேசிய அவர் “நிலம் அடிப்படையில்தான் இங்கு தீண்டாமை நடந்தது, நிலம் அடிப்படையில்தான் சுரண்டல்கள் நடைபெற்றிருக்கிறது. நிலத்தை இழந்தவர்கள் உரிமைகள் அற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.  நிலம் மீட்பு என்பது தலித்துகளை பொருத்தவரை மிக முக்கிய போராட்டமாக இருக்கிறது.
தலித் உரிமை பற்றி பேசினால் சாதி வெறியர்கள் என்கிறார்கள்” என்று சாதி பிரச்னைகள் பற்றி பட்டியலிட்டவர் ராஜராஜன் சோழன் எங்கள் ஜாதி என்று 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர் என்னுடைய சாதியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.  தலித் மக்களின் நிலம் பறிக்கப்பட்டது, டெல்ட்டா மண்ணில் மிகப்பெரிய சாதி கொடுமைகள் நிகழ்ந்தது, 400 பெண்களை விலை மாந்தர்களாக விற்று மங்கள விலாஸ் தொடங்கியது அவருடைய ஆட்சி காலத்தில் தான். என வரலாற்று விஷங்களை பேசியிருந்தார்.
 
இந்த கருத்து தற்போது தீவிரமடைந்து வருகிறது. விவாதப்பெருளாகவும் மாறி வருகிறது. இந்நிலையில்தான் பா. இரஞ்சித் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல் துறை.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்