முகப்புகோலிவுட்

நிலமே எங்கள் உரிமை! அசுரன் படத்திற்கு பா.இரஞ்சித் வாழ்த்து!

  | October 09, 2019 12:36 IST
Asuran

இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

வடசென்னை படத்தை அடுத்து நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் “அசுரன்”. மஞ்சுவாரியர், அம்மு அபிராமி, கென், டீஜே, பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பஞ்சமி நிலம் மீட்பு, நில உரிமை, சாதி அதிகாரத்தை எதிர்க்கும் கதைக்களம் கொண்ட இப்படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தொடர்ந்து நிலமீட்பு குறித் அரசியல் பேசும் படங்களை எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இயக்குநர் பா.இரஞ்சித் அசுரன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பா. இரஞ்சித் கூறியிருப்பதாவது,
 
தமிழ்த்திரையில் அசுரன்' கள் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன்,
தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் நடிகர் தனுஷ் நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தானுமற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! என பதிவிட்டுள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com