முகப்புகோலிவுட்

'வசனங்களை படித்து பார்க்கும் மக்கள் செல்வன்' - வைரலாகும் "96" மேக்கிங் வீடியோ..!!

  | July 11, 2020 07:31 IST
96 Movie

துனுக்குகள்

  • இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில்
  • பள்ளிப் பருவ காதலை அழகாக காட்டப்பட்டிருந்தது இப்படத்தின் திரைக்கதை
  • அழகிய நிகழ்வினை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில்
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு  வெளியான படம் தான் '96'. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்து ஓடியது. ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள்.

பள்ளிப் பருவ காதலை அழகாக காட்டப்பட்டிருந்தது இப்படத்தின் திரைக்கதை. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்திருந்தனர். 

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் பிரேம்குமார் அழகிய நிகழ்வினை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 96 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிக்கும் ஒரு காட்சியில் அந்த கட்சியில் பேசவேண்டிய வசனங்களை விஜய்சேதுபதி படித்துப்பார்க்கும் காணொளியை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com