முகப்புகோலிவுட்

அரவிந்த் சாமி - ரெஜினா நடிக்கும் " கள்ள பார்ட் "

  | February 11, 2019 12:20 IST
Kallapart

துனுக்குகள்

 • எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் "கள்ளபார்ட்"
 • கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார்
 • இப்படத்திற்கு ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா
மூவிங் பிரேம்ஸ்  பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா  இணைந்து தயாரிக்கும் படம் "கள்ள பார்ட்"  அரவிந்த் சாமி கதாநாயகனாக  நடிக்கிறார். கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார் மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ்,  பேபி மோனிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. படத்தை பற்றி இயக்குநர் ராஜபாண்டி பேசும் போது,

“அரவிந்த் சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்க்ரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும்.

ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார்.
படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது” என்றார் இயக்குநர். இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.  
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com