முகப்புகோலிவுட்

காதலர் தினத்தில் வெளியாகும் 'தேவ்' படத்தின் அப்டேட்

  | February 13, 2019 13:07 IST
Dev

துனுக்குகள்

  • காதலர் தினத்தன்று தேவ் திரைப்படம் வெளியாகிறது.
  • கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர்.
  • புதுமையான ஜானர் என்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.
கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் காதலர் தினத்தில் வெளியாகவிருக்கும் தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் ஷோ நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சி காலை 6 மணிக்கு வெளியாகிறது. 

படத்தில் கார்த்தி,ரகுலை தவிர்த்து கார்த்திக்,ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே. விக்னேஷ் உள்ளிட்டோர் நடத்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரஜத் ரவி ஷங்கர் படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளி வந்திருக்கும் பாடல்கள் ஹிட்டடித்து வருகின்றன.

காதலர் தினமான வரும் வியாழன் அன்று இந்தப்படம் வெளியாகிறது. இதன் ப்ரீமியர் ஷோ காலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
அட்வென்ச்சர் மற்றும் ட்ராவலிங் ஜானரில் தேவ் எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக கார்த்தி கடைக்குட்டி சிங்கத்தில் நடித்திருந்தார். அது முழுக்க முழுக்க கிராமம், குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு அப்படியே நேர்மாறாக  சிட்டி லொகேஷன்களில் செம ஸ்டைலிஷாக  தேவ் படம் உருவாக்கப்பட்டுள்ளது. புது இயக்குநர், புதுமையான ஜானர் என்பதால் இளைஞர்கள் மத்தியில் தேவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏமாற்றி விடாமல் இருந்தால் சரி!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்