முகப்புகோலிவுட்

'முகிலன் எங்கே' போராட்டகளத்தில் இயக்குநர் ராஜுமுருகனும் கவுதமனும்..

  | March 02, 2019 16:44 IST
Mugilan

துனுக்குகள்

 • ராஜுமுருகன் ஜிப்சி படத்தை இயக்கி வருகிறார்
 • கவுதமன் புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார்
 • ராஜுமுருகனின் ஜிப்சி படத்தில் முகிவன் நடித்திருந்தார்
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த உயிர்கொல்லி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டின் வரலாற்றில் கருப்பு நாளாக மாறியது.
 
அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் திடீரென எப்படி வன்முறை வெடித்தது. துப்பாக்கி சூடு எப்படி நடத்தப்பட்டது என பல கேள்விகள் இந்த போராட்டத்திற்கு பின்பு எழுப்பப்பட்டது.
 
பேராட்டத்தை கலவரமாக மாற்றியது காவல்துறையினர்தான் என்கிற ஆதாரங்களை ஆவணங்களாக தயாரர் செய்திருந்தார் சூழலியல் போராளி முகிலன். இந்த ஆவணங்களை மக்கள் மத்தியில் வைக்க ஊடகவியலாளர்களை சந்தித்துவிட்டு இரயிலில் பயணம் செய்த சூழலியல் போராளி முகிலன் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார். இவரை யார் கடத்தியிருக்கிறார்கள் என்கிற கேள்விகள் எழுந்தன. அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் எவ்விதமான நேர்மையான பதில் கிடைக்காததால் மக்கள் போராட்ட அமைப்புகள் இன்று சென்னையில் முகிலன் எங்கே என்கிற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து பெரும்திரள் ஆர்பாட்டத்தை நடித்தினர். இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ராஜுமுருகன்,
 
“ மக்கள் எளிதில் எல்லா நிகழ்வுகளையும் மறந்துவிடக்கூடியவர்கள் என்பதினாலேயே அரசு இந்த பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. மக்களின் மறதிதான் அரசாங்கத்தின் பலமாக இருக்கிறது. என்னுடை ஜிப்ஸி திரைப்படத்தில் ஒரு பாடலில சமூக போராளிகள் பலரையும் நடிக்க வைத்திருந்தேன், அதில் முகிலனும் ஒருவர். அவரோடு உரைநிகழ்த்தி கடந்த நேரங்கள் இன்னும் என் நினைவைவிட்டு அகலவில்லை.
 
நிச்சயமாக அரசியல் கட்சிகள் இதை அரசியலாக்க வேண்டும், மக்கள் இந்த பிரச்னையை மறக்காமல் இருக்க அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்” என்று கூறினார்.
 
இயக்குநர் கவுதமன் பேசும் போது,
 
“அரசாங்கத்தின் ஒடுக்குமுறை என்பது எல்லை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது.  பல்வேறு பேராட்டங்களில் கலந்துக்கொள்ளும் போராளிகளை அச்சுறுத்தும் வேலையை இந்த அரசு செய்கிறது. முகிலன் தன்னுடைய குடுப்பத்திற்காக போராடவில்லை. அடுத்த தலைமுறைகளுக்காக போராடியவர். அவரை மீட்டுக்கும் வரை போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். வருகின்ற 4ம் நாள் காவல்துறை முகிலனை கண்டுபிடித்து கொடுக்கவில்லை என்றால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரில் மாபெரும் ஆர்பாட்டத்தை நாம் நடத்த வேண்டும்” கூறினார்.

முகிலன் எங்கே என்கிற முழக்கம் திரைத்துறையிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து குரல் கொடுக்கும் பல இயக்குநர்கள், நடிகர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com