முகப்புகோலிவுட்

“உலக தரமான உருவாக்கம்” சூப்பர் டீலக்ஸ் படம் குறித்து இயக்குநர் ராஜுமுருகன்

  | April 06, 2019 19:05 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • கடந்த வாரம் வெளியானது சூப்பர் டீலக்ஸ்
 • இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார்
 • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்' இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, காயத்ரி, ரம்யாகிருஷ்ணன் மிஷ்கின் இன்னும் பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா  இசையயில் கடந்த வாரம் திரைக்கு வந்த இந்தப் படம் பலரது பாராட்டுகளையும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது.
 
இந்நிலையில் படத்தைப் பார்த்த இயக்குநர் ராஜூ முருகன், படம் குறித்த தனது கருத்தை முகநூல் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார். அதில், 'சூப்பர் டீலக்ஸ்' பார்த்தேன். படம் நெடுக அசாத்தியமான காட்சிகள். மனித மன ஆழங்களின் அன்பை, குரூரத்தை, காமத்தை, கடவுளை பிரமாதமான திரைமொழியில் பேசுகிறது படம். உலக தரமான உருவாக்கம். நண்பன் தியாகராஜன் குமாரராஜாவுக்கு முத்தங்கள். அவ்வளவு சின்சியாராக உழைத்திருக்கும் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ஃபகத் பாசில், அந்த குட்டி பையன் அஷ்வந்த், யுவனின் இசை, P.S. வினோத், நீரவ் ஷாவின் ஒளிக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்று கூறப்பட்டுள்ளது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com