முகப்புகோலிவுட்

தனுஷுக்கு ஜோடி லக்ஷ்மி மேனனா? – விளக்கமளித்த இயக்குநர் ராம்குமார்

  | October 29, 2018 13:47 IST
Dhanush

துனுக்குகள்

  • ராம்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளார்
  • இந்த படம் ஃபேண்டசி காமெடி ஜானரில் உருவாகவிருக்கிறது
  • இதில் தனுஷுக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது
தமிழில் விஷ்ணு விஷாலின் ‘முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்' படத்திலும் விஷ்ணுவே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் ஃபேண்டசி காமெடி ஜானரில் உருவாகவிருக்கிறது. சமீபத்தில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது.
 
தற்போது, இது குறித்து இயக்குநர் ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “வணக்கம். ராட்சசனுக்கு பிறகு தனுஷ் அவர்களுடனான திரைப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள்ளாகவே கதாநாயகி குறித்தான இது போன்ற தவறான தகவல்களை யாரும் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்