முகப்புகோலிவுட்

“எங்களுக்கு தோல்வியே இல்லை” வெற்றி களிப்பில் இயக்குநர் சற்குணம்!

  | July 18, 2019 20:08 IST
Sargunam

துனுக்குகள்

  • விமல் ஓவியா நடிப்பில் வெளியாகி கலக்கல் ஹிட் கொடுத்த படம் களவாணி
  • எனக்கும் விமலுக்கும் ஒரு ராசி உண்டு - இயக்குநர் சற்குணம்
  • களவாணி 2 படத்திற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள்
விமல் ஓவியா நடிப்பில் வெளியாகி கலக்கல் ஹிட் கொடுத்த படம் களவாணி. இப்படத்தை வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சற்குணம் இரண்டாம் பாகத்தை இயக்கி இருந்தார். கடந்தவாரம் வெளியிடப்பட்ட இப்படம் எதிர்பார்த்தபடியே ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்ற பெற்றிருக்கிறது.
 
இதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் சற்குணம்
“களவாணி போன்ற ஹிட் படத்தை கொடுத்து விட்டு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து மக்களை திருப்திப்படுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம்.. ஆனால் களவாணி 2 படத்திற்கும் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
 
எனக்கும் விமலுக்கும் ஒரு ராசி உண்டு. நாங்கள் இருவரும் இணைந்த களவாணி, வாகை சூடவா, விமலை வைத்து நான் தயாரித்த மஞ்சப்பை, இப்போது களவாணி 2 என அனைத்து 4 படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்து விட்டன. எங்கள் கூட்டணிக்கு தோல்வியே இல்லை” என நெகிழ்ச்சியாக கூறினார்.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்