முகப்புகோலிவுட்

விபத்தில் உதவி இயக்குநர் மரணம்; சோகத்தில் இயக்குநர் ஷங்கர்.!

  | May 15, 2020 19:16 IST
Shankar

ஜி.வி.பிரகாஷ் மற்றும் காயத்ரி சுரேஷ் நடித்த 4G படத்தின் மூலம் அருண் பிரசாத் இயக்குநராக அறிமுகமாக இருந்தார்.

எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், இளம் இயக்குனர் ‘அருண் பிரசாத்' எனும் வெங்கட் பக்கர் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம் சாலை விபத்தில் காலமானார். அவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் காயத்ரி சுரேஷ் நடித்த 4G படத்தின் மூலம் அருண் பிரசாத் இயக்குநராக அறிமுகமாக இருந்தார். சி.வி. குமாரின் திருகுமரன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெங்கட் பக்கர், இதற்கு முன்பு பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

வெங்கட் பக்கர் குறித்த தகவல் தெரிந்த ஷங்கர், உணர்ச்சிவசப்பட்டு தனது இரங்கல் செய்தியை ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இளம் இயக்குநரும் எனது முன்னாள் உதவியாளருமான அருணின் திடீர் மறைவால் மனம் உடைந்தேன். நீங்கள் எப்போதும் இனிமையாகவும், நேர்மறையாகவும், கடின உழைப்பாளராகவும் இருந்தீர்கள். எனது பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுடன் உள்ளன, உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com