1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ள இதற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
#Indian2#HappyRepublicDaypic.twitter.com/1upcB4TrYL
— Shankar Shanmugham (@shankarshanmugh) January 26, 2018
தற்போது, நேற்று (ஜனவரி 26-ஆம் தேதி) இயக்குநர் ஷங்கர் டிவிட்டரில் குடியரசு தின வாழ்த்துக்கள் என ஸ்டேட்டஸ் தட்டியதோடு, ‘இந்தியன் 2’ என்று எழுதப்பட்டிருக்கும் ஹீலியம் பலூனை தைவான் நாட்டில் தனது டீமுடம் பறக்கவிட்ட வீடியோவையும் ஷேரிட்டுள்ளார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் துவங்கவுள்ளனர். மொத்த படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்திற்குள் முடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.