முகப்புகோலிவுட்

ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா சிவா?

  | October 12, 2019 13:08 IST
Rajinikant

துனுக்குகள்

  • தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தன
  • ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்' படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
 
சந்திரமுகி, குசேலன், படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் மூன்றாவது முறையாக ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் நயன்தாரா. பேட்ட படத்தை அடுத்து இரண்டாவது முறையாக அனிருத் ரஜினியின் படத்திற்கு இப்படம் மூலம் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி அடுத்து அரசியல் தளத்தில் தீவிரம் காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் அவர் அடுத்த படத்தில் தீவிரம் காட்டவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஒரு புரம் ரஜினி ரசிகர்கள் நலதிட்ட உதவிகள் செய்து வருகின்றனர் விரைவில் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் சிவா ரஜினியை நேரில் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது என தகவல்கள் வெளியாகின. ஆனால் சிவாவின் இயக்கத்தில் ரஜினி தனது அடுத்த படத்தை துவங்குவார் என செய்திகள் வந்தன.
 
இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளி விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சிவா கலந்து கொண்டுள்ளார். இதனை அறிந்த ரஜினியின் ரசிகர்கள் ரஜினிகாந்தின் 167வது படத்தை சிவா இயக்க இருப்பது உறுதி என்று சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. விஸ்வாசம் படத்தோடு ரஜினியின் பேட்ட படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்