முகப்புகோலிவுட்

விபத்தில் சிக்கிய சுசீந்திரன்..! கையில் எலும்பு முறிவு..

  | January 24, 2020 17:35 IST
Suseenthiran

துனுக்குகள்

 • இயக்குனர் சுசீந்திரனின் முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு.
 • சுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
 • அவர் காலையில் வாக்கிங் செல்லும்போது விபத்துக்குள்ளானார்.
இயக்குனர் சுசீந்திரன் இன்று காலை விபத்துக்குள்ளானதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுசீந்திரன் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். அதையடுத்து, அவர் நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துனிவிருந்தால் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் கடைசியாக சாம்பியன் திரைப்படம் வெளியானது.

தற்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருந்துவருகிறார். இந்நிலையில் இன்று காலை வாக்கிங் சென்றுகொண்டிருந்த அவர் மீதி வாகனம் மோதி விபத்துக்கு உள்ளதாம். கையில் கடுமையான அடிபட்டிருந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள Orthomed மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கையில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளதால், லேசர் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும், தொடர்ந்து 3 வாரங்கள் அவர் முழு ஓய்வில் இருக்கவெண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பறவிவருகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com