முகப்புகோலிவுட்

மனோபாலா இயக்கிய குறும்படம்.! டீஸரை வெளியிட்ட VP.!

  | July 08, 2020 21:11 IST
Manobala

மனோபாலா, கமல் ஹாசனின் வெளிவரவுள்ள ‘இந்தியன்-2’ படத்திலும் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர்-நடிகர் மனோபாலா ஆண்டுகளாக சிறந்த காமெடி நடிகராக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இவர் 80 மற்றும் 90களில் சிவாஜிகனேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த்,  சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சிறந்த இயக்குநராகவும், வலம் வந்தவர். மேலும், சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

நடிகராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கலக்கிய அவர், இந்த ஆண்டில் மட்டும் பச்சை விளக்கு, காலேஜ் குமார், அசுரகுரு, ட்கால்டி என பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் இந்த கொரோனா லாக்டவுனுக்கு இடையில், ‘நன்னயம்' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தில் நடிகர் உதயா, அம்மு, ஜெய பிரகாஷ் மற்றும் சத்ய பிரியா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்போது இந்த குறும்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர்-நடிகர்-தயாரிப்பாளர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மனோபாலா, கமல் ஹாசனின் வெளிவரவுள்ள ‘இந்தியன்-2' படத்திலும் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com