முகப்புகோலிவுட்

ஜல்லிக்கட்டு காலையுடன் நடந்து வரும் சூரி..! வைரலாகும் புகைப்படங்கள்..!

  | July 06, 2020 23:55 IST
Soori

சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பதைத் தவிர்த்து, ‘அண்ணாத்த’ மற்றும் ‘சர்பத்’ ஆகிய படங்களையும் கைவசம் கொண்டுள்ளார்.

காமெடி நடிகர் சூரி தற்போது ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த' படத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார். அதே சமயம், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது பலருக்கும் தெரியும். 

அவர், இந்த கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில், தனது வேடிக்கையான வீடியோக்களையும் படங்களையும் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், தனது நகைச்சுவையான பாணியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தனது ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

தற்போது மதுரைக்கு அருகிலுள்ள தனது சொந்த ஊரில் தனது குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட்டு வரும் அவர், ஒரு ஜல்லிக்கட்டு காளையுடன் வலம் வரும் புகைப்படங்கள் சமீபத்தில்சமூக ஊடகங்களில் மாஸ் காட்டி வருகின்றன.

சூரி இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!!” என தமிழில் தலைப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் தனது கம்பீரமான செல்லப்பிராணியை குளிப்பாட்ட குளத்துக்கு அழைத்து செல்வது தெரிகிறது.

இதன் மூலம் நடிகர் சூரி, என்னதான் சிட்டிக்கு வது பல படங்களில் நடித்து புகழின் உயரத்தில் இருந்தாலும், தனது இயல்பான கிராமத்து வாழக்கையை பெரிதும் விரும்புகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.

சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பதைத் தவிர்த்து, ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த' மற்றும் கதிருடன் ‘சர்பத்' ஆகிய படங்களையும் கைவசம் கொண்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com