முகப்புகோலிவுட்

‘அசுரன்’ திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்..!

  | October 17, 2019 13:22 IST
Dhanush

அசுரன் படத்துக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு

துனுக்குகள்

  • தி.மு.க தலைவர் ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்
  • அசுரன் படம் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது
  • அசுரன் படம் பூமணி எழுதிய வெட்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது
தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று வெற்றிமாறனின் அசுரன் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடசென்னைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, ரூ.100 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படத்தை பலரும் பாராட்டிவருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இப்படத்தின் கதையையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், திரையரங்கில் தான் அமர்ந்திருக்கும் இருக்கும் புகைப்படத்தை இணைத்து, “ #Asuran  படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!
கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ் அவர்களுக்கும் பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்