முகப்புகோலிவுட்

நண்பர் சேதுராமனின் இறப்பால் மனமுடைந்த சந்தானம்..! திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

  | March 27, 2020 12:46 IST
Sethuraman

சிறந்த மருத்துவராக திகழ்ந்து வந்த இவர் துரதிர்ஷ்டவசமாக நேற்று மாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

2013-ஆம் ஆண்டு வெளியான காதல்-நகைச்சுவைப் படமான "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சேதுராமன். பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவரான இவர் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் வெற்றிக்குப் பிறகு, மேலும் மூன்று தமிழ் படங்களில் நடித்தார், "வாலிப ராஜா" (2016), "சக்க போடு போடு ராஜா" (2017), மற்றும் "50/50" (2019). சிறந்த மருத்துவராக திகழ்ந்து வந்த இவர் துரதிருஷ்டவசமாக நேற்று மாலை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதையடுத்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்த சந்தானம், இந்த துக்கமான செய்தியை அறிந்ததும், இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில் “என் அன்பு நண்பர் டாக்டர் சேதுவின் மறைவில் முற்றிலும் அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன்.. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வி.டி.வி கனேஷ், சாந்தனு, ஐஷ்வர்யா ராஜேஷ், இயக்குநர் வெங்கட் பிரபு, குஷ்பு, சதீஷ், க்ரிஷ், பிரசன்னா உட்பட பல திரை பிரபலங்கள் தங்கள் வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்து வருகின்றனர். 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com