முகப்புகோலிவுட்

'அப்ப ஹீரோ இப்ப டாக்டர்' - நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்

  | February 16, 2020 15:46 IST
Sivakarthikeyan

இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

துனுக்குகள்

 • 'அப்ப ஹீரோ இப்ப டாக்டர்'
 • நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்
 • டாக்டர் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கால்பதித்ததில் இருந்து நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம், மற்றும் தேர்ந்தெடுக்கும் கதை என்று அனைத்தையும் மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசை புயல் இசையமைக்க படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்க, யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நாளை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த படத்தின் பிரஸ்ட் லுக் காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com