முகப்புகோலிவுட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்' - சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குநர் நெல்சன்..!

  | September 17, 2020 16:01 IST
Sivakarthikeyan

துனுக்குகள்

  • சின்னத்திரையில் இருந்து கஷ்டப்பட்டு முன்னேறி இன்று வெள்ளித்திரையில்
  • கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து
  • தற்போது ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்ட நிலையில் டாக்டர் படத்தின் அடுத்தகட்ட
சின்னத்திரையில் இருந்து கஷ்டப்பட்டு முன்னேறி இன்று வெள்ளித்திரையில் மின்னும் நாயகன் தான் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன். அவருடைய நடிப்பில் தற்போது உருவாகி வரும் இரண்டு படங்கள் 'அயலான்' மற்றும் 'டாக்டர்'. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் திரைப்படத்தின் இறுதி அட்டவணை கோவாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் கிறிஸ்துமஸ் 2020 வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளிவந்தன. 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், மற்றும் யோகி பாபு ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது சமீபத்திய பேட்டியில், 'டாக்டர்' ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்ற எண்ணம் மக்களுக்கு இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாறாக, இது மிகவும் வேடிக்கை நிரம்பிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று அண்மையில் வெளியானது, அனிரூத் இசையில் இயக்குநர் மற்றும் நாயகன் ஆகியோர் இணைந்து "செல்லமா" என்ற முதல் சிங்கள் பாடலையும் அதன் பிறகு "நெஞ்சமே" என்ற அடுத்த சிங்கள் பாடலும் வெளியானது. தற்போது ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்ட நிலையில் டாக்டர் படத்தின் அடுத்தகட்டமாக டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தனது பணியை  தொடங்கியுள்ளார். 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com