முகப்புகோலிவுட்

'ஆதித்ய வர்மா' திரைப்படத்திற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு!

  | November 26, 2019 13:08 IST
Adithya Varma

துனுக்குகள்

 • கிரிஷாயா இப்படத்தை இயக்கி இருந்தார்
 • இப்படத்தை பாலா இயக்கி பின் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது
 • மருத்துவர்கள் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி'. இப்படத்தை தமிழில் கிரீஷாயா இயக்கி ‘ஆதித்யா வர்மா' என்கிற வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கிறார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். பனிதா சந்து நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.
 
 
சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவரான நாயகன் மது அருந்தி அறுவை சிகிச்சை செய்வது போன்ற காட்சிக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் சங்க செயலாளர் கூறுகையில், திரைப்படத்தை எடுப்பவர்களுக்கு பொறுப்புணர்வு வேண்டும் என்றும். சில காட்சிகள் மருத்துவர்கள் குறித்து தவறான எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
 
ஒரு புறம் இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழ கொண்டாடி வருகிறது. இந்நிலையில் மருத்துவர்களின் எதிர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com