முகப்புகோலிவுட்

Mr.லோக்கல் படத்திற்கு ‘சிவகார்த்திகேயனே விமர்சனமா’..?- ட்விட்டர் ட்ரெண்டிங் வீடியோ!

  | May 18, 2019 15:34 IST
Mr Local

வீடியோவை இப்போ ட்விட்டரில் பகிர்ந்துட்டு இருக்கும், ரசிகர்கள், Mr.லோக்கல் படத்தின் விமர்சனம்-னு குறிப்பிட்டு பகிர்ந்துட்டு இருக்காங்க.

இயக்குனர் ராஜேஷ் இயக்கி சிவகார்த்திகேயன் நடிச்சு வெளியாகியிருக்க ஒரு திரைப்படம் 'Mr.லோக்கல்'. இந்த திரைப்படம் கடந்த மே 17-ஆம் தேதி திரைக்கு வந்துச்சு. இந்த படத்துல சிவகார்த்திகேயன் கூட அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிச்சிருந்தாங்க. மேலும் சதீஷ், ரோபோ சங்கர், ஆர் ஜே பாலாஜி என பல காமெடி கதாப்பாத்திரங்களும் இந்த படத்துல இடம்பெற்றிருந்தாங்க. 

ராஜேஷ் இயக்கியிருக்காரு, சிவகார்த்திகேயன் மட்டுமில்லாம சதீஷ், ரோபோ சங்கர், ஆர் ஜே பாலாஜி என ஒரு பெரிய காமெடி படையே இந்த படத்துல நடிச்சிருக்காங்க. அதனால இந்த படம், ஒரு பெரிய காமெடி படமா வெளியாகும்னு ரசிகர்கள் பலமா எதிர்பார்த்தாங்க. அப்படி எதிர்பார்த்த இந்த படம், கொஞ்சம் ஏமாற்றம் தரும் படமாவே இருந்துச்சு-னு பல சினிமா ரசிகர்கள் கருத்துகள் வெளியிட்டிருக்காங்க. 
 
மேலும், இந்த படத்தை விமர்சிக்கும் விதமா, ட்விட்டரில் ஒரு வீடியோ அதிகமா பகிரப்பட்டு வருது. அது என்ன வீடியோனா, சினிமா துறைக்கு வர்றதுக்கு முன்னாடி, மேடை பேச்சுகள் பேசிட்டிருந்த சிவகார்த்திகேயன், ஒரு நிகழ்ச்சி மேடையில, அப்போ வெளியான விஜயோட படத்தை கலாய்க்கிற விதமா, விஜயும் சாலமன் பாப்பைய்யாவும் பேசிக்கிற மாதிரி ஒரு மிமிக்கிரி பண்ணிருப்பார். அந்த வீடியோவை இப்போ ட்விட்டரில் பகிர்ந்துட்டு இருக்கும், ரசிகர்கள், Mr.லோக்கல் படத்தின் விமர்சனம்-னு குறிப்பிட்டு பகிர்ந்துட்டு இருக்காங்க. இப்பொ இந்த வீடியோ ட்விட்டர்ல வைரல்!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்