முகப்புகோலிவுட்

“சத்தியமா விடவே கூடாது” ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு குறித்து ‘சூப்பர் ஸ்டார்’ ஆவேசம்.!!

  | July 01, 2020 13:16 IST
Rajinikanth

"காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்"

கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது தனது குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிட்டு வரும் ரஜினிகாந்த், கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் மக்கள் எவ்வாறு வைரஸிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது குறித்து தனது சமுக வலைதள பக்கங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இப்பொது, சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கு குறித்த தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டிடம் காவலர்கள் நடத்தை குறித்த செய்தி வெளிவந்ததை அடுத்து அவர் இப்போது ஆவேசமான பதிவைப் பகிர்ந்துள்ளார். அவர் வருத்தமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அவர் தனது குறிப்பில், “தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டணை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது” என கோபத்துடன் எழுதியுள்ளார்.

போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்ட அப்பாவி தந்தை மற்றும் மகனுக்கு நீதி கோரி கோலிவுட் பிரபலங்கள் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் கொலைக்கு காரணமான காவல்துறையைச் சேர்ந்தவர்களை தண்டிக்க சமூக ஊடகங்கள் தலைப்பை பிரபலப்படுத்தி வருகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com