முகப்புகோலிவுட்

சினிமாவிலிருந்து வெளியேறும் அளவிற்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் - கமல்ஹாசன் உருக்கமான பேட்டி

  | June 02, 2017 22:30 IST
Celebrities

துனுக்குகள்

  • திரைத்துறைக்கு 28 % வரி மத்தியரசால் விதிக்கப்பட்டுள்ளது.
  • ஹிந்தி திரைப்படமும் மற்ற மொழி திரைப்படங்களும் ஒன்றல்ல.
  • சூதாட்ட விடுதிகளுக்கு திரைத்துறைக்கு ஒரே வரி என்பதை ஏற்க முடியாது
மத்திய அரசு நாடு முழுக்க ஜிஎஸ்டி என்னும் புதிய வரிவிதிப்பு முறையை அறிவித்துள்ளது. அதில் திரைப்பட துறைகளுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு நாடு தழுவிய அளவில் சினிமா உலகத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

வரி விதிப்பு அறிவிப்பு தொடர்பாக, தமிழ், தெலுகு, மலையாள மற்றும் கன்னட திரைத்துறையினர் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி சினிமா துறைக்கு பொருந்தாது எனவும், உடனே திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷாலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தென்னிந்திய வர்த்தக சபையில் செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது, நடிகர் உலகநாயகன் கமல்ஹாசனும் கலந்துக்கொண்டு தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.
கமல் ஹாசன் கூறியதாவது அவர் கூறியதாவது:

"புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி என்னும் வரியை திரைப்பட தயாரிப்புக்கு 28% விதிக்க உள்ளதாக செய்திகள் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரே வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கும் ஒரே வரியை கொண்டு வருவது என்பது சரியான திட்டமாக இருக்காது.அதே போல் ஹிந்தி சினிமா தயாரிப்புக்கு இணையாக மற்ற மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு மேலும் கஷ்டமளிக்கும் செயல்.

ஹிந்தி மொழியின் வியாபார சந்தை வேறு, மற்ற மொழி திரைப்படங்களுக்கான வியாபார சந்தை என்பது வேறு. சூதாட்ட விடுதிகளுக்கும், திரைப்பட துறையினருக்கும் 28 சதவீத வரி என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதே நிலை தொடர்ந்தால் திரைத்துறையில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவல நிலைமை எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் என் மனதில் உள்ளது, மத்திய அரசு அந்த நிலைமைக்கு இட்டு செல்லாது என்றும் நம்புகிறேன்.

மேலும் இந்திய நாடு என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, பல மொழி,பல கலாச்சாரம்,பல வழிபட்டு முறைகள், பலவிதமான மனிதர்கள் வாழும் நாடு இங்கு ஒற்றை கலாச்சாரம் என்பதை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்.

இது போன்ற நடவடிக்கைகள் அந்த இடத்திற்கு தான் நம்மை அழைத்து செல்லும் ஹிந்தியை தவிர்த்து பிற மொழி திரைப்படங்களுக்கு 28 சதவீத வரி விதித்தால் என்பது அந்த தொழில் மூழ்கும் நிலையே உருவாகும். ஆகவே மத்திய அரசு இந்த வரிவிதிப்பை முறையை மறு பரிசீலனை செய்து, வாய்ப்பு இருப்பினும், வாபஸ் பெற வேண்டும்."என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்