முகப்புகோலிவுட்

ஏன் இப்படி பண்றீங்க..? - பாடகி ஜானகி குறித்து எழுந்த வதந்தி, தெளிவுபடுத்திய S.P.B..!!

  | June 29, 2020 19:20 IST
Singer Janaki

துனுக்குகள்

 • 1957ம் ஆண்டு தமிழில் வெளியான 'விதியின் விளையாட்டு', என்ற திரைப்படத்தின்
 • பொதுவாக திரையுலகில் கலைஞர்களின் இறப்பு குறித்து வதந்திகள் வருவது இயல்பு
 • பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் அவர் நலமாக இருப்பதை ஒரு காணொளி
1957ம் ஆண்டு தமிழில் வெளியான 'விதியின் விளையாட்டு', என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆந்திராவை சேர்ந்த ஒரு பாடகி. திரைத்துறைக்கு வந்த முதல் ஆண்டிலேயே அந்த அம்மையார் 6 மொழிகளில் பாடல்களை பாடினார். சுமார் 60 ஆண்டுகள் கடந்த தனது சினிமா பயணத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது போன்ற இந்திய மொழிகள் மற்றும் இன்றி ஆங்கிலம், லத்தீன், அரபிக் போன்ற 17 உலக மொழிகளில் பாடல்கள் பாடி சாதனை படைத்தார் ஜானகி என்னும் அந்த பாடகி. 

பல பாடகர்கள் தங்களுடைய மானசீக குருவாக நினைக்கும் இவர் பல சுவையான பாடல்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கி உள்ளார். மச்சான பாத்திங்களா, காற்றில் எந்தன் கீதம், ராசாவே உன்ன விட, என்று பல ரம்யமான பாடல்கள் இவர் குரலில் உருவானதே என்பது குறிப்பிடத்தக்கது. 1957ம் ஆண்டு தொடங்கிய அவருடைய இசை பயணம் 2018ம் ஆண்டு வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக திரையுலகில் கலைஞர்களின் இறப்பு குறித்து வதந்திகள் வருவது இயல்பு, அதேபோல நேற்று ஜானகி அவர்கள் இறந்துவிட்டதாக வதந்திகள் சில வெளிவர உடனடியாக அதற்கு அவருடைய மகன் முரளி கிருஷ்ணா ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். தனது தாய் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் அவர் நலமாக இருப்பதை ஒரு காணொளி மூலம் அறிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com