முகப்புகோலிவுட்

திரௌபதி “படம் பார்க்க வாங்க” பா. ரஞ்சித்தை அழைக்கும் மோகன்..!

  | March 04, 2020 10:37 IST
Draupathi Movie

ஜி. மோகன் இயக்கத்தில் ரிஷி ரிச்சார்டு நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‘திரௌபதி’.

இயக்குநர் பா. ரஞ்சித்தைச் சமீபத்தில் வெளியான திரௌபதி திரைப்படத்தைப் பார்க்க வருமாறு அப்படத்தின் இயக்குநர் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜி. மோகன் இயக்கத்தில் ரிஷி ரிச்சார்டு நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‘திரௌபதி'. தலைப்பிலேயே பெரும் சச்சையைக் கிளப்பிய இப்படம் வெளியானதிலிருந்து பல சர்ச்சையைக் கிளப்பிவருகிறது.

ஒருபுறம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் இப்படம் குறிப்பிட்ட சாதியை வன்மையான சாடுவதாக எதிர்ப்புக் குறளை கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், அட்டகத்தி, மெராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா. ரஞ்சித்தை ‘திரௌபதி' திரைப்படத்தைப் பார்க்க வருமாறு, இப்படத்தின் இயக்குநர் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் யிஷிரி கோபி அழைப்பு விடுத்துள்ளனர்.

யிஷிரி கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் “சகோதரர் பா.ரஞ்சித் அவர்களுக்கு. நீங்கள் திரௌபதி படத்தைப் பார்க்க வர வேண்டும்...உங்களைத் திரெளபதி படம் பார்க்க வைக்க முயற்சிகள் செய்தேன்.ஆனால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.அதனால் டிவிட்டர் மூலமாக அழைப்பு விடுக்கிறேன்..அனைவரும் சமம் என்ற அம்பேத்கர் அவர்களின் வார்த்தையை உண்மையாக்க நீங்கள் திரெளபதி படத்தைப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை!” எனப் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவை டேக் செய்து திரௌபதி திரைப்படத்தின் இயக்குநர் ஜி. மோகன் “நானும் அன்புடன் அழைக்கிறேன் என் சகோதரனை” எனப் பதிவிட்டுள்ளார். அதையடுத்து, பா. ரஞ்சித் இந்த அழைப்பை ஏற்பாரா, இப்படத்தைப் பார்ப்பாரா என்ற கேள்விகள் இணையத்தில் உலாவி வருகிறது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com