முகப்புகோலிவுட்

“கல்யாணம் பண்ணிக்கோ” நித்யா மேனனுக்கு துல்கர் கொடுத்த அட்வைஸ்.!

  | July 08, 2020 22:51 IST
Dulquer Salmaan

துல்கர் சல்மான கடைசியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இளம் நடிகர் துலகர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையேயான அந்த கெமிஸ்ட்ரி சிறப்பாக இருக்கக் காரணம், இவர்களுக்கு இடையே இருக்கும் நல்ல நட்புதான் என்று துல்கர் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கணமணி' படத்தில் அவர்களது காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மோலிவுட்டின் மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர், ஆமல் சூஃபியா எனும் பள்ளிப் பருவ தோழியை காதைத்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இபோது மரியம் அமீரா சல்மான் எனும் குழந்தையும் உள்ளார். (இதையும் படிங்க : https://movies.ndtv.com/tamil/kollywood/do-you-know-dulquer-salmans-love-cum-arranged-marriage-story-2212001)

hl0d2h08

நித்யா மேனன் சமீபத்தில் ஒரு நேர்கானலில், தனது நண்பரும் சக நடிகருமான துல்கர் சல்மான், தன்னை நிச்சயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும், துல்கர் ஒரு முழுமையான குடும்பஸ்தராக மாறிவிட்டார் என்று கூறியுள்ள நித்யா மேனன், துல்கர் தனது கல்யாணம் எவ்வளவு சிறப்பானது என்றுஅடிக்கடி கூறியுள்ளதாகவும், அதனால் தன்னையும் திருமணம் செய்துகொள்ளும்படி சமாதானப் படுத்தியதாகவும் கூறினார்.

மேலும், தான் நடித்த கதாபாத்திரங்களில், மணி ரத்னத்தின் ஓ காதல் கண்மணியின் இடம்பெற்ற ‘தாரா' எனும் கதாப்பாத்திரம் தான் தனக்கு நெருக்கமானது என்றும் நித்யா வெளிப்படுத்தினார். அந்த கதாப்பாத்திரத்தின் வாழக்கை நோக்கமும், நிஜ வாழ்க்கையைப் பற்றிய தனது கருத்துக்களும், வாழ்க்கைக்கான பார்வையும் ஒத்தவை என்று அவர் கூறியுள்ளார்.

நித்யா மேனன் கடைசியாக தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது, கொலாம்பி எனும் மலையாள படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

அதேபோல், துல்கர் சல்மான கடைசியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். அதையடுத்து தமிழில் தற்போது, ‘வான்' மற்றும் ‘ஹே சினாமிகா' மற்றும் மலையாளத்தில் ‘குருப்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com