முகப்புகோலிவுட்

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ லேட்டஸ்ட் அப்டேட்..!

  | February 17, 2020 17:32 IST
Kannum Kannum Kolliyadithaal

இம்மாதம் 28-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அதனை முன்னிட்டு நாளை இப்படத்தின் 2-வது ட்ரைலர் வெளியாகிறது.

துலகர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் புதிய தமிழ்ப்படம் ‘கண்ணும் கொள்ளையடித்தால்'. துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரீத்து வர்மா நடிக்க, இந்த படத்தில் KPY புகழ் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிரஞ்சனி அகத்தியன் நடிகையாக அறிமுகமாகிறார். இயக்குநர் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இப்படத்தை தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தை, ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார். கே.எம் பாஸ்கரன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க பிரவீன் அந்தோனி படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திற்கு ‘மசாலா காஃபி' இசைக்குழு இசையமைத்துள்ளது. இப்படத்தின் அதிகார்ப்பூர்வ ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து இரு தினங்களுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய ‘என்னை விட்டி எங்கும் போகாதே' பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இம்மாதம் 28-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அதனை முன்னிட்டு நாளை இப்படத்தின் 2-வது ட்ரைலர் வெளியாகிறது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நித்யா மேனெனுடன் இணைந்து நடித்த ரொமாண்டிக் திரைப்படமான ‘ஓ காதல் கண்மணி' திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. தற்போது இப்படத்திற்கும் பெரும் எதிர்பாப்புகள் எழுந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com